Homeசெய்திகள்சினிமாசூர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்..... உறுதிப்படுத்திய போனி கபூர்!

சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்….. உறுதிப்படுத்திய போனி கபூர்!

-

- Advertisement -

சூர்யா தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் கசிந்தது. சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்..... உறுதிப்படுத்திய போனி கபூர்!அதன்படி சூர்யா, ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் உருவாக உள்ள கர்ணா என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து தற்போது ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர், தனது மகள் ஜான்வி கபூர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்..... உறுதிப்படுத்திய போனி கபூர்!எனவே ஜான்வி கபூர் சூர்யாவுடன் இணைந்து கர்ணா படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ