- Advertisement -
சென்னையை அடுத்த பூந்தமல்லியில், திரைப்பட நகரம் அமைக்க, அரசு அனுமதி அளித்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் அமைய உள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் படங்களின் படப்பிடிப்பிற்காக தளங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை போதுமான அளவிற்கு தமிழகத்தில் இல்லாத காரணத்தால் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகின்றன. அதனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாமல் போகும் நிலை உருவாகிறது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் செலவீனங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.



