
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. சுமார் 3,000 குடியிருப்புகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என ஏராளமான காவலர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஸ்கிரிப்ட் ஒர்க் போயிட்டு இருக்குன்னு நெல்சன் சார் சொன்னாரு…… ‘ஜெயிலர் 2’ குறித்து மிர்னா!
காவலர் குடியிருப்பு சார்பில் வருடத்திற்கு ரூபாய் 2,550 வீதம் 3,000 குடும்பங்கள் சேர்ந்து ஆவடி மாநகராட்சிக்கு சுமார் 76லட்சத்து 50ஆயிரம் ரூபாய் தொழில்முறை வரியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவலர் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லக்கூடிய சாலை தெரு விளக்குகள் பாழடைந்த நிலையிலும், பயன்பாட்டில் இல்லாத நிலையும், சாலையில் கழிவுநீர் தேங்கியதுடன் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், விஷ ஜந்துக்கள் உலாவும் சூழலில் வாழ்ந்து வருவதாக காவலர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குடியிருப்பு நுழைவு வாயிலில் பரவி இருக்கும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், மேலும் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றாமல் தீயில் கொளுத்தி விட்டு செல்வதால் புகை மண்டலம் ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதாகும் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பலமுறை மாநகராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என காவலர் குடியிருப்பில் வசிக்கக்கூடிய இல்லத்தரசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
‘கார்த்தி 27’ ஷூட்டிங் நிறைவடைந்ததா?…… வெளியான புதிய தகவல்!
மேலும் காவலர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை முழுவதுமாக சுத்தம் செய்து கழிவுநீர் மற்றும் குப்பைகளை முறையாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.