spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்'.....'கலையும், அரசியலும்' என்ற தலைப்பில்...

‘கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்’…..’கலையும், அரசியலும்’ என்ற தலைப்பில் மினி திரையரங்கம்!

-

- Advertisement -

 

'கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்'.....'கலையும், அரசியலும்' என்ற தலைப்பில் மினி திரையரங்கம்!

we-r-hiring

சென்னை மெரினா கடற்கரையில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மீண்டும் இணைந்த மாரி 2 பட கூட்டணி….. ‘ராயன்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், கருணாநிதியின் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிலவறையில் ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைப் பறைச்சாற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞரின் அருங்காட்சியகத்தில் கலைஞரின் எழில் ஓவியங்கள் என்ற தலைப்பில் ‘கருணாநிதியின் இளமை காலம்’ முதல் ‘முதுமை காலம்’ வரையிலான அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளனர். அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட 8 நூலின் விளக்க காணொளி ஒளிபரப்பப்படுகிறது.

என்னது இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க வில்லையா?….. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதேபோல், சிறப்பம்சமாக கலைஞரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தொழில்நுட்ப அறையும் அமைக்கப்பட்டுள்ளது. ‘கலையும் அரசியலும்’ என்ற தலைப்பில் 79 பேர் அமரும் வகையில் மினி திரையரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நினைவிடத்தை நுழைவு வாயிலில் அண்ணா, இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் இடம் பெற்றுள்ளனர். அதனை கடந்து சென்றால் கருணாநிதியின் சிலையும் இடம் பெற்றுள்ளது. இந்த சிலைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

MUST READ