spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'வாழ்த்துக்கள் செல்லம்'..... வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்திய பிரபல நடிகர்!

‘வாழ்த்துக்கள் செல்லம்’….. வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்திய பிரபல நடிகர்!

-

- Advertisement -

பிரபல நடிகர் ஆர்யா, வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'வாழ்த்துக்கள் செல்லம்'..... வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்திய பிரபல நடிகர்!இந்நிலையில் சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு நிக்கேலாய் சச் தேவ் என்ற மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச் தேவ் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதை தொடர்ந்து விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பிரபல நடிகர் ஆர்யா தனது சமூக வலைதள பக்கத்தில், வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிச்சயதார்த்த புகைப்படங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக “வாழ்த்துக்கள் செல்லம்” என்று வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்தியுள்ளார்.

MUST READ