Homeசெய்திகள்சினிமாசஸ்பென்ஸ் திரில்லரில் நடிக்கும் நடிகர் நகுல்..... டைட்டில் லுக் வெளியீடு!

சஸ்பென்ஸ் திரில்லரில் நடிக்கும் நடிகர் நகுல்….. டைட்டில் லுக் வெளியீடு!

-

நடிகர் நகுல் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகை தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல், கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். அதைத்தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.சஸ்பென்ஸ் திரில்லரில் நடிக்கும் நடிகர் நகுல்..... டைட்டில் லுக் வெளியீடு! இந்நிலையில் நடிகர் நகுல் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தி டார்க் ஹெவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டீம் பி ப்ரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்க பாலாஜி இயக்குகிறார். இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதில் நடிகர் நகுல் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரியாக நடிக்கிறார். ரகுளுக்கு ஜோடியாக ரேணு சௌந்தர் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சரண், மனோஜ், கேசவன், ஆண்டனி பிரகன், ஜான் அலெக்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராஜா ஆறுமுகம் இசையமைக்க மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்கிறார். சஸ்பென்ஸ் திரில்லரில் நடிக்கும் நடிகர் நகுல்..... டைட்டில் லுக் வெளியீடு!தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை சசிகுமார், பரத், சிபிராஜ் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போஸ்டரில் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

MUST READ