
தேனி மாவட்டம், உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டு தக்காளி கடுமையான விலை சரிவைக் கண்டுள்ளது.

வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தெலுங்கு பிரபலம்
டி.சிந்தலைசேரி சுற்றுவட்டாரப பகுதிகளில் பரவலாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பருவமழை முடிந்து தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், தக்காளி அதிக விலைபோகும் என்று எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகள், தக்காளி கிலோ 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விற்பனையாவதால் வேதனையடைந்துள்ளனர்.
80,000 ரூபாய் செலவு செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட தக்காளி சந்தைகளில் ஒரு பெட்டி 100 ரூபாய் வரை மட்டுமே விலை போவதால் ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ராஜூ முருகன் படத்திலிருந்து விலகிய எஸ்.ஜே.சூர்யா… கமிட்டான இளம் நடிகர்…
வரும் காலங்களில் அரசு தக்காளி விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்துக் கொடுத்தால் மட்டுமே விவசாயத்தைத் தொடர முடியும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


