spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாமியாரிடம் இருந்து விலை உயர்ந்த பரிசு பெற்ற ஜெயம் ரவி..... என்னன்னு தெரியுமா?

மாமியாரிடம் இருந்து விலை உயர்ந்த பரிசு பெற்ற ஜெயம் ரவி….. என்னன்னு தெரியுமா?

-

- Advertisement -

ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் படத்தில் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மாமியாரிடம் இருந்து விலை உயர்ந்த பரிசு பெற்ற ஜெயம் ரவி..... என்னன்னு தெரியுமா?இருப்பினும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன், சைரன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அடுத்ததாக காதலிக்க நேரமில்லை, ஜீனி, பிரதர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதேசமயம் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக மோகன் ராஜா இயக்க உள்ள தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார், ஜெயம் ரவிக்கு விலை உயர்ந்த பரிசு ஒன்றை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சுஜாதா விஜயகுமார் பிரபல தயாரிப்பாளரும் ஆவார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு, பூமி, சைரன் உள்ளிட்ட படங்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. மாமியாரிடம் இருந்து விலை உயர்ந்த பரிசு பெற்ற ஜெயம் ரவி..... என்னன்னு தெரியுமா?தற்போது சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவிக்கு ரூ. 1.5 கோடி மதிப்பிலான வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சைரன் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறாத நிலையிலும் சுஜாதா விஜயகுமார், ஜெயம் ரவிக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கியுள்ளார் என்றால் சைரன் திரைப்படம் ஹிட்டாகி இருந்தால் எத்தனை கோடிக்கு பரிசு கொடுத்து இருப்பார் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ