spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!

மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!

-

- Advertisement -

 

மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!

we-r-hiring

சத்தியமங்கலத்திற்கு அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த மருமகனை மாமனார் கொலை செய்ய முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருமகனின் தங்கை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார்… படக்குழு உற்சாகம்…

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திற்கு அருகே எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர், 10- ஆம் வகுப்புப் படிக்கும் தனது தங்கை ஹர்ஷினியை பள்ளிக் கொண்டு சென்றுவிட தனது இருசக்கர வாகனத்தின் பின்னாள் அமர வைத்து சத்தியமங்கலம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார். சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் சாலையில் சென்ற போது, அதிவேகமாக வந்த பிக் அப் வேன் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது.

இதில் அண்ணன், தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். தலையில் பலத்த ரத்த காயத்துடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹர்ஷினி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சுபாஷிற்கு சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புஷ்பா 2-க்கு முன்பே 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு…

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த விபத்தை ஏற்படுத்தியது சுபாஷின் மாமனாரான சந்திரன் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியானது. தனது மகள் மஞ்சுவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சுபாஷ், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது சந்திரன் கோபத்தில் இருந்ததாகவும், இதனால் வேனை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

தலைமறைவாகியுள்ள சந்திரன் மற்றும் அவரது மனைவி சித்ராவை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 20- க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ