spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் புகழ் ஸ்ரீநாத் பாசி

பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் புகழ் ஸ்ரீநாத் பாசி

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளவர் இயக்குநர் பா ரஞ்சித். இவர் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி உள்ளார். 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் மற்றும் இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இயக்குநர் பா.ரஞ்சித், நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். அதேபோல, நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது பா ரஞ்சித் நடத்தி வருகிறார்.

அந்த வகையில், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம், அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறது. இறுதியாக இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல, ஜெ பேபி திரைப்படமும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் புதிய படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அவரது உதவி இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி இணைந்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அவர் தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

MUST READ