spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு - முதலமைச்சர்

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு – முதலமைச்சர்

-

- Advertisement -

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார்.

தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர். வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் #இரண்டாம்_உலகத்_தமிழ்ச்_செம்மொழி_மாநாடு நடைபெறவுள்ளது! சென்னையில் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒன்று கூடுவோம்! உலகம் வியக்கத் தமிழை உயர்த்திப் பிடிப்போம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ