Homeசெய்திகள்சினிமாரிலீஸுக்கு தயாராகும் ஹரிஷ் கல்யாணின் 'டீசல்'!

ரிலீஸுக்கு தயாராகும் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’!

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் டீசல் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.ரிலீஸுக்கு தயாராகும் ஹரிஷ் கல்யாணின் 'டீசல்'!

ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் பொறியாளன், தாராள பிரபு, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டில் ஹரிஷ் கல்யாண் எல் ஜி எம், பார்க்கிங் போன்ற திரைப்படங்கள் வெளியானது. அதில் பார்க்கிங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதற்கிடையில் ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து, டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல் திரைப்படம் கொரோனா காலகட்டத்திலேயே தொடங்கப்பட்டது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணத்து ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். வட சென்னையில் பெட்ரோல், டீசல் திருட்டு சம்பந்தமான கதை களத்தில் அரசியல் பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது.ரிலீஸுக்கு தயாராகும் ஹரிஷ் கல்யாணின் 'டீசல்'! ஏற்கனவே ஏறத்தாழ படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது பாண்டிச்சேரி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே ரிலீஸ் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ