17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன.

17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ,சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதலாவது போட்டியில் மோதுகின்றன. இதுவரை நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. . இதில் சிஎஸ்கே அணி 20 முறையும் , பெங்களூர் அணி 10 முறை வென்றுள்ளது. `1 போட்டியானது முடிவில்லாமல் போனது.
அணியின் அதிகபட்சமாக சிஎஸ்கே அணியானது 226 ரன்களும், ஆர்சிபி அணியானது 218 ரன்களும் குவித்துள்ளன. அணியின் குறைந்தபட்சமாக சிஎஸ்கே அணி 82 ரன்னும், ஆர்சிபி அணி 70 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியுள்ளன.