spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை கண்டித்து, சென்னையில் திமுகவினர் போராட்டம்!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை கண்டித்து, சென்னையில் திமுகவினர் போராட்டம்!

-

- Advertisement -

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை கண்டித்து, சென்னையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியிருந்தது. எனினும், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தன்னை கைது செய்யக்கூடாது என்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நேற்றிரவு 09.30 மணியளவில் அமலாக்கத்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

மக்கள் அச்சப்பட வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்

இதனைத்தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை கண்டித்து குரல்களை எழுப்பி கோஷமிட்டனர். போராட்டமானது சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரூ.7.5 லட்சம் கோடி பாஜக அரசு ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறியுள்ளது, அது பற்றி விசாரணை இல்லை என தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மேலும் *கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தி திமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். போராட்டத்தில் சென்னை மாநகர மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

*

 

MUST READ