spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் கங்கனா ரனாவத்!

பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் கங்கனா ரனாவத்!

-

- Advertisement -

தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கங்கனா ரணாவத்,  அதைத்தொடர்ந்து இந்திய அளவில் பல மொழிகளில் நடித்துள்ளார். பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் கங்கனா ரனாவத்!பெரும்பாலும் பாலிவுட் படங்களில் அதிகமாக நடித்து வந்தார். சமீபத்தில் தமிழில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்திருந்தார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் இடும் பதிவுகளுக்கு சர்ச்சையான கருத்துக்கள் எழுவது வழக்கம். பலமுறை அரசியல் தொடர்பான கருத்துக்களை தைரியத்துடன் தன் வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருபவர். இதைத்தொடர்ந்து இவர் அரசியலில் களமிறங்கப் போவதாக செய்திகள் கசிந்தன. குறிப்பாக பாஜக வுக்கு ஆதரவாக இவர் அரசியலில் களம் காண்பார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் பாஜக தலைமையினால் அறிவிக்கப்பட்ட ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கங்கனா ரனாவத் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் கங்கனா ரனாவத்!அதன்படி வரும் மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி நாடாளுமன்றத் தொகுதியில் கங்கனா போட்டியிட உள்ளார். மண்டி தொகுதி கங்கனா பிறந்த ஊர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளாகவே தேசியக் கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த கங்கணாவுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சினிமாவில் இருந்து கொண்டே அரசியலில் பயணிக்க அவர் எடுத்த முயற்சிகள் மிகப்பெரிய பலனைக் கொடுத்துள்ளது என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

MUST READ