நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் இவர் தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 இல் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் விஜய், வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் போன்றோர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக படத்தின் இறுதி கட்டப் பணிகள் ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக பொது மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்— TVK Vijay (@tvkvijayhq) March 31, 2024
அதன்படி தனது எக்ஸ் தளத்தில், “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


