- Advertisement -
ஆவடியில் கஞ்சா பொட்டலம் போடும்போது ஒருவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவடி அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரத்திற்கு பொட்டலம் போடும்போது ரமேஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சிறு பொட்டலங்கள் உள்ளிட்ட 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து ஆவடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கண்ணம்பாளையம் பகுதியில் அதிகளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் இளைஞர்கள், வட மாநிலத்தவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்ய மேற்கு மாம்பலத்தில் இருந்து இந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
