Homeசெய்திகள்ஆவடிகள்ளச்சந்தையில் மதுபட்டில்கள் அமோகமாக விற்பனை - ஆவடி

கள்ளச்சந்தையில் மதுபட்டில்கள் அமோகமாக விற்பனை – ஆவடி

-

- Advertisement -

ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் அரசு  விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்றே கள்ளச் சந்தையிலும் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவது வேதனை அளிக்கிறது.

டாஸ்மாக் பார்கள் தொடர்பான டெண்டர் கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதனைதொடர்ந்து, சென்னை மண்டலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் நடத்த உரிமம் காலாவதி ஆனது.

we-r-hiring

ஆனால், சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோதமாக டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் விடுமுறையில் இருந்தாலும் பார்கள் மட்டும் செயல்படுவதோடு கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று(05.02.2023) தைபூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்த பின்பும் ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் பார் உரிமம் இல்லாமல் செயல்படும் டாஸ்மாக் பாரில் கள்ளச்சந்தையில் மதுபட்டில்கள் அமோகமாக விற்பனை செய்யப்படும் காட்சி வெளியாகியுள்ளது.

Home

அரசு டாஸ்மாக் கடையில் கிடைப்பது போன்றே அனைத்து பிராண்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்கு மதுப்பிரியர்கள் படையெடுத்து செல்கின்றனர். ஒவ்வொரு பாட்டிலும் இரண்டு மடங்கு அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 150 ரூபாய் கொண்ட பாட்டில் 300 ரூபாய்க்கும், 200 ரூபாய் பாட்டில் 400 ரூபாய் என அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் புகார்  அளித்தும் சட்டம் ஒழுங்கு காவல்துறை, கலால் காவல்துறை என எந்த காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

MUST READ