spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா25 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டாரின் படையப்பா!

25 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டாரின் படையப்பா!

-

- Advertisement -

கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான படம் படையப்பா. 25 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டாரின் படையப்பா!இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜிகணேசன், சித்தாரா, மணிவண்ணன், செந்தில், நாசர், அப்பாஸ், பிரீத்தா விஜயகுமார், லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் ரஜினி செம மாஸாகவும் ஸ்டைலாகவும் நடித்திருந்தார். அதேசமயம் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிக போல்டாக நடித்து பட்டைய கிளப்பியிருந்தார்.25 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டாரின் படையப்பா! நீலாம்பரியின் கதாபாத்திரம் கோலிவுட்டையே மிரள வைத்தது. அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. சிவாஜி கணேசன், கடைசியாக ரஜினியுடன் இணைந்து இந்த படத்தில் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியான சமயத்தில் 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் இன்று கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசிப்பார்கள். 25 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டாரின் படையப்பா!அந்த அளவிற்கு இந்த படத்தில் வரும் பஞ்ச் டயலாக்குகள், பாடல்கள், சண்டைக்காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் ரஜினி நடித்த படங்களில் படையப்பா திரைப்படம் பலருக்கும் ஃபேவரைட் படங்களில் ஒன்றாகும். இந்நிலையில் இந்த படம் இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

MUST READ