
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு தரிசிப்பதற்கான முன்பதிவுத் தொடங்கியுள்ளது.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வரும் ஏப்ரல் 11- ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி வரை நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாடசி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணம் வரும் ஏப்ரல் 21- ஆம் தேதி கோயில் வடக்காடு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 08.35 மணி முதல் காலை 08.59 மணிக்குள் நடைபெறுகிறது.
திருக்கல்யாணத்தில் பங்கேற்று சுவாமியைத் தரிசிக்கவிருக்கும் பக்தர்களுக்கான ரூபாய் 200, ரூபாய் 500 சீட்டுகளுக்கான ஆன்லைன் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயிலின் இணையதள பக்கத்தின் மூலமாக வரும் ஏப்ரல் 13- ஆம் தேதி இரவு 09.00 மணி வரை முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்!
ரூபாய் 500 சீட்டு ஒருவர் இரண்டு முறை பதிவுச் செய்துக் கொள்ளலாம் எனவும், ரூபாய் 200 சீட்டுக்கு ஒருவர் மூன்று முறை பதிவுச் செய்யலாம் என்றும், ஒரே நபர் இரண்டு கட்டண சீட்டுகளையும் பதிவுச் செய்ய முடியாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு பக்தர்கள் https://maduraimeenakshi.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்.