spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசமத்துவ நிலையை நோக்கி தமிழ்நாடு – பொங்கல் விழாவில் முதல்வர் பேச்சு…

சமத்துவ நிலையை நோக்கி தமிழ்நாடு – பொங்கல் விழாவில் முதல்வர் பேச்சு…

-

- Advertisement -

முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொண்டு பொங்கலிட்டு பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.  சமத்துவ நிலையை நோக்கி தமிழ்நாடு – பொங்கல் விழாவில் முதல்வர் பேச்சு…சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தலைமை செயலகத்தில் வரலாற்றில் முதல் முறையாக தலைமை செயலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், 5 மண் பானைகள் வைக்கப்பட்ட அகப்பையால் கிளறி பொங்கல் வைக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பணியாளர்களுக்கு பொங்கலை வழங்கி மகிழ்ந்தனர்.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தலைமை செயலக பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று வாழ்த்துகளை தெரிவித்தார்.

முன்னதாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருவதாகவும், எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி சமத்துவ நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று திராவிட மாடல் அரசு உழைத்துக் கொண்டிருப்பதாக கூறினார். மேலும், நான் மட்டுமல்ல எல்லோரும் சேர்ந்து தான் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என கூறிய அவர், உங்களுடன் இந்த பொங்கலை கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த மகிழ்ச்சி உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் என அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

இந்த பொங்கல் விழாவில் அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மனோ தங்கராஜ், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செயலாளர்,துறை செயலாளர், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும்  தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி சேட்டை அணிந்தும், சேலை உடுத்தியும் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வேளாண்மை,நமது விவசாயிகள் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது – பிரதமர் மோடி…

MUST READ