வேதாரண்யம் அருகே தகட்டூர் மாப்பிள்ளைவீரன் திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
500 ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோயிலில் வேதாரண்யம் மற்றும் நாகை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காவடி எடுத்து வந்து, மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக மண் குதிரைகள், மனித பொம்மைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் வளாகத்தில் வைத்தனர்.
கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் திடீர் ராஜினாமா!
காணிக்கையாக வந்த வாழைப்பழங்களை கோயில் பூசாரிகள் ஊர்வலமாக வந்து மக்களை நோக்கி வீசினர். இந்த பழத்தை உண்டால் நோய் நொடிகள் நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளதால் இதனை பக்தர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பிடித்தனர்.