spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்- ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு!

இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்- ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்- ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு!

we-r-hiring

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள், இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

“பருப்பு இருப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்”- மத்திய அரசு உத்தரவு!

காசா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. அப்போது, காரில் சென்றுக் கொண்டிருந்த இஸ்மாயில் ஹனியேவின் மகன்கள் ஹசீம், அமீர், முகமது ஆகியோர் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அவர்களின் மூன்று பேத்திகளும், மூன்று பேரன்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ்- இஸ்ரேல் போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துள்ளன. தற்போது வரை 32,000- க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது. ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களைக் கவர்ந்த பஜாஜ் நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனம்!

ஹமாஸுக்கு ஆதரவாக லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமைப்புகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

MUST READ