Homeசெய்திகள்ஆவடிஆவடி பகுதியில் 18 உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள்  பறிமுதல்

ஆவடி பகுதியில் 18 உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள்  பறிமுதல்

-

- Advertisement -

ஆவடி, அம்பத்தூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில், அம்பத்தூர் எஸ்டேட், ஆகிய பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது. அவர்களிடமிருந்து 18 உயர் ரக செல்போன்கள் பறிமுதல் செய்த நிலையில் 20 க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய இருவர் மீதும் குண்டர்  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் பொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.இவர் வேலை முடித்துவிட்டு நேற்று கடந்த 3ஆம் தேதி மாலை ஆல் இந்தியா ரேடியோ அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பறித்து சென்றதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எதிரியை தேடி வந்த நிலையில்.

we-r-hiring

அன்னனூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில் செல்போன் பறித்து விட்டு வேகமாக வந்ததை ஒப்பு கொண்டனர். மேலும் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பதையே தொழிலாக இருந்ததாகவும் கூறியவர்களை உடனடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தியதில். அஜித் (எ) அஜய் வ/26 கூலி வேலை செய்து வருவதாகவும். அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் வ/20 ஏசி மெக்கானிக் எனவும் தெரியாது. மேலும் இவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில்  பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.

Home

அதில் மேலும் ஆவடி, திருவேற்காடு, அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட பகுதியில் 20க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இவர்களிடமிருந்து சமீபத்தில் திருடப்பட்ட 18 உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள்  பறிமுதல் செய்தனர். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில். இருவரும் மீதும் குண்டாஸ் வழக்கு பதிவு செய்ததிருமுல்லைவாயில் போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ