Homeசெய்திகள்ஆவடிஅம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கஞ்சா பறிமுதல் - குற்றவாளி கைது

அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கஞ்சா பறிமுதல் – குற்றவாளி கைது

-

- Advertisement -

ஒடிசாவிலிருந்து அம்பத்தூர் பட்டரவாக்கத்திற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல். பொறி வைத்துப் பிடித்த மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க மாநகர காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் அவர்களின் உத்தரவின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி. சி. தனம்மாள் அவர்கள் நடத்திய கஞ்சா வேட்டையில் பட்டரவாக்கம் ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் வடமாநில இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாறுவேடத்தில் சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

we-r-hiring

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் கம்பளி விற்பது போல மறைத்து வைத்திருக்கும் கஞ்சா பொட்டலங்களை சக வடமாநில இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது ஆதாரப்பூர்வமாக தெரியவந்தது.

உடனடியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை சுற்றி வளைத்த அம்பத்தூர் மதுவிலக்கு தனிப்படை போலீசார். சட்டவிரோதமாக விற்பனை செய்த 5 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

Home

அதனை பறிமுதல் செய்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில். குற்றவாளிகள் M.A. ரமேஷ் பால் மற்றும்  M.A. லால்சன் லைமா என தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றினர்.

MUST READ