- Advertisement -
அருண்விஜய் நடிக்கும் 36-வது படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைபப்டம் வெளியானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான், பார்டர், பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜய்யின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இதானி நடிக்க உள்ளார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
