Homeசெய்திகள்தமிழ்நாடுசாலைப் பணிகளை விரைவுபடுத்துக - கட்கரிக்கு முதல்வர் கடிதம்

சாலைப் பணிகளை விரைவுபடுத்துக – கட்கரிக்கு முதல்வர் கடிதம்

-

- Advertisement -

6 வழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும், சாலைகளை நல்ல தரத்துடன் பராமரிக்கவும் அறிவுறுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

M.K.Stalin

we-r-hiring

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்கள்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடையேயான ஒப்பந்த பிரச்சனையால் 6 வழிச்சாலை பணிகள் முடங்கியுள்ளன. பணிகள் கிடப்பில் இருப்பதால் ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபேட்டை இடையேயான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலை மோசமானதால் ஸ்ரீபெரும்புதூர், சென்ன சமுத்திரம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க 2020 ஆம் ஆண்டு ஐகோர்ட்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Home

மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நற்பெயருக்கு களங்கள் ஏற்பட்டுள்ளது. 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும். சாலைப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ