எவரெஸ்ட் சிகரத்தில் ஜோதிகா… வைரலாகும் வீடியோ…
- Advertisement -
எவரெஸ்ட் சிகரத்தில் நடிகை ஜோதிகா ட்ரெக்கிங் செல்லும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை எந்த நடிகையும் எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரெக்கிங் சென்றது இல்லை என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் அறிமுகம ஆனவர் நடிகை ஜோதிகா. முதல் படமே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து விஜய்யுடன் குஷி படத்தில் இணைந்து நடித்தார். இத்திரைப்படத்தையும் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கி இருந்தார். குஷி படம் மாபெரும் ஹிட் படமாக மாறியதால் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ஜோதிகா. அடுத்தடுத்து ஜோதிகாவுக்கு ஏறுமுகம் தான். இதைத் தொடர்ந்து சூர்யாவுடன் மட்டும் கிட்டத்தட்ட 5 திரைப்படங்களில் ஜோதிகா நடித்துள்ளார்.

இந்த 5 திரைப்படங்களுமே கோலிவுட்டின் மைல்கல்லாக உள்ளன. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் என பல வெற்றிப் படங்களில் நடித்தார். அண்மையில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற மலையாள படத்திலும், சைத்தான் என்ற இந்தி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா இமயமலைக்கு தனது தோழிகளுடன் டிரெக்கிங் சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஒரு நடிகை இமயமலைக்கு டிரெக்கிங் செல்வது இதுவே முதல்முறை என்று ரசிகர்கள் ஜோதிகாவை பாராட்டி வருகின்றனர்.