- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். ஆக்ஷன், அதிரடி, அமர்க்களம் கொண்ட கதையம்சங்களில் நடித்து தூள் கிளப்புபவர் விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சுமார் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டையும் நடத்தியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விஷாலின் திரைப்பயணத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்றால் அது, மார்க் ஆண்டனி படம் மட்டும்தான். தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ரத்னம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. இவர்களின் கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால், ரத்னம் திரைப்படம் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.




