spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய தம்பதி

நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய தம்பதி

-

- Advertisement -
திரைத்துறையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் பெரும்பாலோனோர் சினிமா மட்டுமில்லாமல் தொழில் நிறுவனங்களையும் தொடங்கி வருகின்றனர். பல நடிகர்கள் உணவகங்கள், திரையரங்குகள், திரைப்பட தயாரிப்பு, ஆடை நிறுவனங்கள், நகை தொழில், விளம்பரங்கள், மாடலிங் பல தரப்பட்ட தொழில்களில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் பல தொழில்களில் முனைப்பு காட்டி வருகிறார். தொடக்கத்தில் கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நயன்தாரா, அடுத்து லிப் பாம் கம்பெனியை தொடங்கினார்.

 

we-r-hiring
இதையடுத்து, சாய் வாலா மற்றும் பிரபல டிவைன் புட் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். மேலும், தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘9 ஸ்கின்’ எனும் பெரில் ஸ்கின் கேர் நிறுவனத்தை தொடங்கினார். இந்தியா மட்டுமன்றி கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் 9 ஸ்கின் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதுதவிர பெமிநயன் என்ற நாப்கின் மூதலீடும் நயன்தாரா செய்திருக்கிறார்

இந்நிலையில், நயன்தாராவுக்கு போட்டியாக பிரபல பாடல் ஆசிரியர் சினேகன், மற்றும் அவரது மனைவி கன்னிகா ரவி தம்பதி புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். சினேகம் ஹெர்ப்ஸ் என்ற புதிய ஹெர்பல் ஆயில் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அண்மைக் காலமாக நடிகர், நடிகைகள் சினிமா மட்டுமன்றி மற்ற தொழில்களிலும் முதலீடு செய்து வருகின்றனர்.

MUST READ