Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி வளாகத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி வளாகத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

நெல்லையில் கல்லூரி வளாகத்தில் வாலிபர் தூக்கில் தொங்கியதால் கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

we-r-hiring

நெல்லை பேட்டையில் அரசு உதவி பெறும் கல்லூரி வளாகத்தில் அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சுடலைமுத்து(26) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கல்லூரி வளாகத்தை ஒட்டிய பகுதியில் குடியிருந்து வரும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கில் தூங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லை பேட்டையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை உடற்கல்வி பிரிவில் பயின்றவர் சுடலைமுத்து. இவரது வீடு கல்லூரி அருகிலேயே உள்ள செந்தமிழ் நகரில் உள்ளது. இவர் தற்பொழுது பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக அவர் இன்று தனது வீட்டின் அருகே உள்ள கல்லூரி வளாகத்திலேயே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார்.

Home New

இதனை அடுத்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனால் இன்று அந்த கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

MUST READ