spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'பி.டி.சார்'..... ரிலீஸ் குறித்த அப்டேட்!

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘பி.டி.சார்’….. ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் பி.டி.சார் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'பி.டி.சார்'..... ரிலீஸ் குறித்த அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, வீரன் போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சிறிது காலம் ஓய்வு எடுத்திருந்த ஹிப் ஹாப் ஆதி தற்போது மீண்டும் திரைத் துறையில் பணியாற்ற தொடங்கி விட்டார். சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஹிப் ஹாப் ஆதி பி.டி.சார் எனும் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான கார்த்திக் வேணுகோபாலன் படத்தை இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'பி.டி.சார்'..... ரிலீஸ் குறித்த அப்டேட்!ஹிப் ஹாப் ஆதி தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து பாக்யராஜ், பாண்டியராஜ், பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தை வருகின்ற மே 24ஆம் தேதி திரையிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ