Homeசெய்திகள்சினிமாலோகேஷின் 'கைதி 2' குறித்து அர்ஜுன் தாஸ் பேசியது!

லோகேஷின் ‘கைதி 2’ குறித்து அர்ஜுன் தாஸ் பேசியது!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தை இயக்கியிருந்தார். லோகேஷின் 'கைதி 2' குறித்து அர்ஜுன் தாஸ் பேசியது!கடந்த 2019 இல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் கார்த்தியை வித்தியாசமான பரிமாணத்தில் காட்டி இருந்தார் லோகேஷ். படத்தின் பின்னணி இசையும் பெரிய அளவில் பலம் கொடுத்தது. இன்றுவரையிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. லோகேஷின் 'கைதி 2' குறித்து அர்ஜுன் தாஸ் பேசியது!இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது எல் சி யு என்ற கான்செப்டின் மூலம் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கைதி 2 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று தான் சொல்லப்படுகிறது. இச்சமயத்தில் கைதி படத்தில் அன்பு என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் சமீபத்தில் நடந்த பேட்டியில் கைதி 2 படம் குறித்து பேசி இருக்கிறார். லோகேஷின் 'கைதி 2' குறித்து அர்ஜுன் தாஸ் பேசியது!அவர் பேசியதாவது, “கைதி 2 படத்தில் டில்லியின் வாழ்க்கையில் என்ன நடந்தது. அடைக்கலம், அன்பு ஆகியோர் டில்லி வாழ்க்கையில் எப்படி நுழைகிறார்கள் என்பது சம்பந்தமாக இருக்கும்” என்று லோகேஷ் கனகராஜ் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். ஏற்கனவே கைதி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. இந்நிலையில் அர்ஜுன் தாஸ் கொடுத்துள்ள இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

MUST READ