Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் கொடூர கொலை- ஓட ஓட துரத்தி கொன்ற கொடூரம்

கோவையில் கொடூர கொலை- ஓட ஓட துரத்தி கொன்ற கொடூரம்

-

- Advertisement -

கோவை அருகே சினிமா பட பாணியில் ஒருவரை மர்மநபர்கள் விரட்டி விரட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

we-r-hiring

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ். இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள நிலையில், வழக்கில் வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்திருக்கின்றனர். இந்த நிலையிலே நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரத்தில் இருவரும் தேனீர் அருந்த வந்த நிலையில், பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தேனீர் கடை முன்பாக கத்தியால் சரமாறி வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயத்துடன் இருந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியான கோகுலின் உடலை கைபற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலென்சில் அனுப்பி வைத்திருக்கின்றனர். சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை ஆனையர் சந்தீஸ் விசாரணை நடத்தி வருகின்றார். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலை வீசி தேடிவருகின்றனர். நாலு பேர் கொண்ட கும்பல் , இரண்டு நபர்களை வழிமறித்து சரமாறி அறிவாளால் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகம் அருகே பட்டபகலில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ