spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இனிமே குட்டீஸ்களுக்கு இந்த வரகு நெல்லிக்காய் சாதம் செஞ்சு குடுங்க!

இனிமே குட்டீஸ்களுக்கு இந்த வரகு நெல்லிக்காய் சாதம் செஞ்சு குடுங்க!

-

- Advertisement -

வரகு நெல்லிக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

வரகரிசி – அரை கப்இனிமே குட்டீஸ்களுக்கு இந்த வரகு நெல்லிக்காய் சாதம் செஞ்சு குடுங்க!
பெரிய நெல்லிக்காய் – 5
வரமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 2

we-r-hiring

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு
நல்ல நல்லெண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:இனிமே குட்டீஸ்களுக்கு இந்த வரகு நெல்லிக்காய் சாதம் செஞ்சு குடுங்க!

முதலில் வரகரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் விட்டு தண்ணீர் கொதித்து வந்ததும் வரகரிசியை அதில் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். வரகு அரிசி நன்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து வரகரிசியை நன்கு வடித்து விட வேண்டும்.

இப்போது வரகு சாதம் தயார்.

இந்நிலையில் இந்த வரகு சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.
பின் பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கி பொடிப்பொடியாக துருவி கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் போட்டு வதக்க வேண்டும்.

அதன் பின்னர் அதில் துருவிய நெல்லிக்காயை போட்டு கிளறி விட வேண்டும். நெல்லிக்காய் சிறிது நேரம் வதங்கிய பின் அடுப்பில் இருந்து இறக்கி நெல்லிக்காய் கலவையை ஆற வைக்க வேண்டும்.இனிமே குட்டீஸ்களுக்கு இந்த வரகு நெல்லிக்காய் சாதம் செஞ்சு குடுங்க!

சில நிமிடங்கள் கழித்து நெல்லிக்காய் கலவையுடன் வரகு சாதத்தை கொட்டி நன்கு கிளறி விட வேண்டும். வரகு சாதம் குழையாமல் கிளறுவது நல்லது.

ஆரோக்கியமான வரகு நெல்லிக்காய் சாதம் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்தது. எனவே நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ