Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்கள்- வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்! கல்லூரியில் பதற்றம்

மாணவர்கள்- வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்! கல்லூரியில் பதற்றம்

-

- Advertisement -

கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

canteen

we-r-hiring

கோவை சூலூர் அருகே உள்ள ஆர்விஎஸ் கல்வி நிறுவனங்களின் கேண்டினில் நேற்று இரவு இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். இப்படி இருக்க கேண்டினில் மாணவர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் மாணவ,மாணவிகள் அலைமோதும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதில் வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் வட மாநில இளைஞர்கள் உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் கல்லூரியில் சுற்றி வருவது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே வட மாநில நபர்களால் பல்வேறு குற்றசம்பவங்கள் தொடர்பாக புகார் எழுந்துள்ள நிலையில், இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியடைய க்கிறது.

MUST READ