உலகின் முதல் ஆழ்கடல் ராணுவ அருங்காட்சியகம்
தொல்லியல் வரலாறு கலையை பறைசாற்றும் வகையில் உலகம் முழுவதும் இப்படி பல நாடுகளில் ஆழ்கடல் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

அந்த வரிசையில் ஜோர்டானில் திறக்கப்பட்ட உலகின் முதல் ஆழ்கடல் ராணுவ அருங்காட்சியகத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 12,000 ஆண்டுகள் பழமையான கிராமம் ஆயிரக்கணக்கான தொல்லியல் தளங்கள் வழிபாட்டுத் தளங்கள் நிறைந்த நாடு மேற்கு ஆசியாவில் உள்ள ஜோர்டான்.
இங்கு செங்கடலை ஒட்டி உள்ள அகாபா நகரில் உலகின் முதல் ஆழ்கடல் ராணுவ அருங்காட்சியகம் கடந்த 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஐந்து மீட்டர் முதல் 28 மீட்டர் வரை மூன்று அடுக்குகளாக ராணுவ தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
2018ல் செங்கடலில் மூழ்கிய சி 130 ஹெர்குலஸ் ஜெட், 90களில் கடலில் மூழ்கிய இராணுவ டேங்க் உள்ளிட்டவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பவளப்பாறைகள் நிறைந்து இப்பகுதியில் ராணுவ தளவாடங்களை வைக்க அவற்றை புது வாழிடங்களாக கொண்டு மீன் உள்ளிட்டவை வளர தொடங்கி இருக்கின்றன. இதன் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
பவளப்பாறைகள் மீன்களோடு ராணுவ தளவாடங்களையும் இங்கு சென்று பார்க்கலாம். டைவிங் விரும்பிகளின் விருப்ப இடமாக இந்த அருங்காட்சியகம் தற்போது மாறி வருகிறது.