நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு புறநானூறு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதேசமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 44 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்ற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 2ஆம் தேதி அந்தமான் பகுதியில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டி போன்ற பிற பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிகை இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் இதன் புதுவரவாக விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்த பூஜா ஹெக்டே, சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை இருப்பதாக சமூக வலைதளங்களை செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


