Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பணி

அரசு மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பணி

-

- Advertisement -

அரசு மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பணி

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு அறிவிப்பு.

தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் ( தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

MUST READ