ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பல்வேறு திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாயில் முதற்கட்மாக 500 கோடி ரூபாய் விடுவித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூர் செஸ் கூடுதல் கட்டணம், முத்திரை வரி மற்றும் கேளிக்கை வரி மீதான கூடுதல் கட்டணம் ஆகியவற்றை அரசு ஒருங்கிணைத்து, கிராமப்புறங்களில் முன்னுரிமைத் திட்டங்களுக்கான நிதி என்ற பெயரில் ஒரு நிதி உருவாக்கப்படுகிறது. இந்த நிதியை பயன்படுத்துவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன. 2022-23 ஆம் ஆண்டிற்கான பல்வேறு திட்ட பணிகளில் குடியிருப்புகள் கட்டுவதற்கும், சுய உதவிக் குழுக்கள், பூங்காக்கள், கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மறு சீரமைப்பு, நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு, மத வழிபாட்டு தலங்களுக்கான பணிகளை நிறைவேற்றுவது, நினைவுச் சின்னங்கள் சிலைகள் அமைப்பது, குளங்கள் , கால்வாய்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பல்வேறு திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாயில் முதற்கட்மாக 500 கோடி ரூபாய் விடுவித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
