spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசென்னையில் ரஷ்ய திரைப்பட விழா... நாளை தொடக்கம்....

சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா… நாளை தொடக்கம்….

-

- Advertisement -
தலைநகர் சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா நாளை தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை தொழில், வர்த்தகம், சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமின்றி சினிமாவுக்கும் ஒரு மூலதனமான நகரமாகும். கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் இன்று உள்ள சினிமா துறைக்கு முன்னோடியாகவும், சினிமா துறை வளரவும் முக்கிய காரணமாக இருந்த நகரம் சென்னை. ஊள்ளூர் சினிமா விழாக்களும், மாநில அளவிலான சினிமா நிகழ்ச்சிகள் மட்டுமன்றி தற்போது தலைநகர் சென்னையில் சர்வதசே அளவில் திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான விழா நாளையும், நாளை மறுநாளும் அதாவது மே 24 மற்றும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த திரைப்பட விழாக்களை விட இந்த விழா அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. காரணம் விழாவில் திரையிடப்படும் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த 2 நாள் விழாவில் ஆங்கில சப் டைட்டில்களுடன் படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த ரஷ்ய திரைப்பட விழாவிற்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ