Homeசெய்திகள்தமிழ்நாடுகொரோனாவுக்கு பின் மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பு- மா.சு

கொரோனாவுக்கு பின் மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பு- மா.சு

-

- Advertisement -

இந்தியாவிலேயே அதிக அளவிலான இருதய சிகிச்சை நிபுண்ர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் என சூலூரில் நடந்த கருத்தரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

masu

we-r-hiring

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அகில இந்திய இருதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் 69 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அகில இந்திய அளவிலிருந்து ஏராளமான இருதய நோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 750 பயனாளிகள் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு நலமுடன் உள்ளனர். இந்தியாவில் உள்ள இருதய அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுனர்களில் 15 சதவீத மருத்துவர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.

கொரானாவிற்கு பிந்தைய காலகட்டத்தில் அதிக அளவிலான மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகின்றது. இதை தவிர்ப்பதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் இது போன்ற கருத்தரங்குகள் மூலம் ஆராய்ச்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஹேப்பி வாக்கிங் பயிற்சி மேற்கொள்ள தளங்கள் அமைக்கப்படும். இதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வரும் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்படும்” என தெரிவித்தார்.

 

MUST READ