Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை- இருவர் கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை- இருவர் கைது

-

- Advertisement -

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு மார்ச் மூன்றாம் தேதி வரை காவல் வழங்கப்பட்டுள்ளது.

Image

we-r-hiring

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை 4 ஏ டி எம் மையங்களில் 72 லட்சத்தி 79 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தலைமையிலான நான்கு எஸ்பி உள்ளிட்ட ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, அரியானா போன்ற மாநிலங்களில் கடந்த ஐந்து நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கொள்ளை கும்பல் தலைவன் ஆசிப், மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் ஹரியானாவில் தனிப்படை போலீசார் கைது செய்துனர். அவர்களை
டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் விசாரணைக்காக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆசிப் மற்றும் ஆசாத் இருவரையும் ஆஜர் படுத்தினர்.

நீதிபதி விசாரணைக்கு பின், வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி வரை, இருவரையும் காவலில் வைக்க நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

MUST READ