மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் நரேந்திர நாயர் தலைமையில் காவல் உதவி ஆணையர் சாய் பிரனீத் மற்றும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலையம் மற்றும் குடியரசுத் தலைவர் செல்லும் வழியில் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது . போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தலின்படிமதுரை விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவில் வரை 10 இடங்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிப்ரவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிப்ரவரி 18-ம் தேதி பங்கேற்கிறார். பிப்ரவரி 19-ம் தேதி உதகமண்டலம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடையே உரையாற்றுகிறார்.
