Homeசெய்திகள்தமிழ்நாடுவன்னியர் இட ஒதுக்கீடு- முதல்வருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

வன்னியர் இட ஒதுக்கீடு- முதல்வருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

-

- Advertisement -

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Image

we-r-hiring

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “எம்.பி.சி பிரிவில் உள்ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் தலித் மற்றும் வன்னியர் சமுதாயங்கள் உள்ளன. கல்வி, அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது. மிக மிக பின் தங்கிய பட்டியலின சமுதாயம் வன்னிய சமுதாயம். நீர் மேலாண்மை பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம்.

சாதி வாரியான கணக்கெடுப்பு என்பது நீண்ட கால செயல்பாடு, இருந்தாலும் இந்த 2 மாதத்திற்குள்ளாக நீதிமன்றம் தெரிவித்த தரவுகளை சேகரித்து மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசை வலியுறுத்தி உள்ளோம். தரவுகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது; இந்த கல்வியாண்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கொண்டு வர வேண்டுமென முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம் தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள தலித், வன்னியர் சமுதாய மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும். எம்.பி.சி பிரிவில் உள்ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம்.

தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தடுக்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என தெரிவித்தார்.

MUST READ