spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின் பேட்டி!

ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது – மு.க.ஸ்டாலின் பேட்டி!

-

- Advertisement -

"பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40 க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அளவில் மோடி எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.

 

"எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களவைத் தேர்தலில் 39/39 தொகுதிகளிலும் வெல்வது இதுவே முதல்முறை. மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கனவு பலிக்கவில்லை. பண பலம் தேர்தலில் எடுபடவில்லை. பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உள்ளது என்பதை இந்த தேர்தல் காட்டுகிறது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியிலான தாக்குதலை பாஜக கொடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது என இவ்வாறு பேசினார்.

 

MUST READ