நடிகர் மைக் மோகன், 1970, 80 காலகட்டங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வந்தவர். இவர் தனது தனித்துவமான நடிப்பிற்காக பல விருதுகளை அள்ளி இருக்கிறார்.
அதே சமயம் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மைக் மோகன் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. படமானது வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், சென்னை, ரஷ்யா, போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்ததை தொடர்ந்து இலங்கையிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் மைக் மோகன் படம் குறித்த சில தகவல்களை சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “இப்போதுதான் இலங்கையில் நடந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (THE GOAT) படப்பிடிப்பில் இருந்து வந்துள்ளேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படம் அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் சரியான விருந்தாக இருக்கும். இந்த படத்தில் நான் தாடி கெட்டப்பில் நடித்திருக்கிறேன். எனது கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். வெங்கட் பிரபு அவருடைய முந்தைய படங்களுக்கும் என்னை அணுகினார். ஆனால் அப்போது என்னால் நடிக்க முடியவில்லை. மேலும் விஜய் மிகவும் எளிமையானவர். கோட் படக்குழுவுடன் பணிபுரிந்த நாட்கள் மிகவும் வேடிக்கையாக இருந்தது.
- Advertisement -


