கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டுவருகிறார்.


முதற்கட்டமாக பிப்ரவரி ஒன்றாம் தேதி வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், நடந்து முடிந்த திட்டப்பணிகள், மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் குறித்த செயல்பாடுகளை ஆய்வு செய்வதார். தொடர்ந்து சேலத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இத்திட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 5,6ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , தேனி மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
