Homeசெய்திகள்சினிமாவிமல் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மாற்றம்!

விமல் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மாற்றம்!

-

- Advertisement -

விமல் நடிக்கும் ‘மா.பொ.சி’ படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.விமல் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மாற்றம்!நடிகர் விமல், பசங்க ,களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு போன்ற பல படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அடுத்ததாக விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 3 படத்தில் நடிக்க உள்ளார் விமல். இதற்கிடையில் நடிகர் விமல், நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்த படத்தை எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்க இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்திற்கு ஏற்கனவே மா.பொ.சி என்று தலைப்பு வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் தலைப்பு சார் என்று மாற்றப்பட்டுள்ளது. விமல் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மாற்றம்!இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படத்தின் டீசர், ட்ரெய்லர் போன்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ