Homeசெய்திகள்தமிழ்நாடுஎருது விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் பலி

எருது விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் பலி

-

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திப்பசந்திரம் கிராமத்தில் சப்பலம்மா கோவில் பகுதியில் இன்று காலை எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை காணச் சென்ற வாலிபரை மாடு முட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்

alanganallur jallikattu

we-r-hiring

ஓசூர் அடுத்து திப்பச் சந்திரம் கிராமத்தில் உள்ள சப்பலம்மா கோவில் திருவிழாவை ஒட்டி எருது விடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே முறையாக அனுமதி பெறவில்லை என கடந்த மாதம் மாடு விடும் திருவிழா நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாக சார்பில் முறையாக அனுமதி பெறப்பட்டு இன்று காலை திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டது. காலை 8 மணி முதல் மாடு விடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருவிழாவை காண ஓசூர் சூளகிரி காமன் தொட்டி பேரிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு விழாவை கண்டுகளித்தனர். இதில் திருவிழாவை காண வந்த ஆரூப் பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 25) என்பவரை மாடு முட்டி தள்ளியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் திருவிழாவில் காளைகள் மற்றும் மாடுகள் முட்டி தள்ளியதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

MUST READ